SuperTopAds

மனைவி மறைவால் கண் கலங்கிய ஓபிஎஸ்!! -நேரில் சென்று ஆறுதல் கூறிய சசிகலா-

ஆசிரியர் - Editor II
மனைவி மறைவால் கண் கலங்கிய ஓபிஎஸ்!! -நேரில் சென்று ஆறுதல் கூறிய சசிகலா-

ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமிக்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.  ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.வினர் மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் வைத்தியசாலையில் உள்ள விஜயலட்சுமி உடலுக்கு சசிகலா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

பின்னர், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து சசிகலா ஆறுதல் கூறினார். அப்போது, ஓ.பன்னீர்செல்வம் கண்கலங்கிய நிலையில் காணப்பட்டார்.