SuperTopAds

இந்தியாவில் வேகமாக பரவும் மர்ம நோயினால்!! -100க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாதிப்பு: 50 பேர் பலி-

ஆசிரியர் - Editor II
இந்தியாவில் வேகமாக பரவும் மர்ம நோயினால்!! -100க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாதிப்பு: 50 பேர் பலி-

இந்தியாவின் உத்திரபிரதேசின் சில மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மர்ம நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட நூறுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மர்ம தொற்று நோய் காரணமாக 50 பேர் வரையில் உயிரிழந்ததுடன், அவர்களில் பெரும்பாலானவர்கள் சிறுவர்கள் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காய்ச்சல், தலைவலி, மூட்டு வலி உள்ளிட்ட நோய் அறிகுறிகளுடன் சிறுவர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவர்களுக்கு தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் சிறுவர்களுக்கு ஏற்பட்டுள்ள குறித்த தொற்று தொற்று குறித்து வைத்தியர்கள் தொடர்ந்தும் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.