தலிபான்களுடன் இந்திய தூதுவர் திடீர் பேச்சுவார்த்தை!!
ஆப்பானிஸ்தானை முழுவதுமாக கைப்பற்றியுள்ள தலிபான் அமைப்பினருடன் இந்திய தூதுவர் முதன் முறையாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டார் தலைநகர் தோஹாவில் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இது குறித்து வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஆப்கானில் சிக்கியுள்ள இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்கள் நாடு திரும்புவது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.