20 ஆண்டுகளின் பின் ஆப்கானிஸ்தானிலிருந்து இன்று முழுதாக வெளியேறியது அமெரிக்கா!!
ஆப்கானிஸ்தானில் தலிபான்களை எதிர்ப்பதற்காக கடந்த 20 வருடங்களாக நிலைகொண்டிருந்த அமெரிக்கப் படையினர் இன்று அங்கிருந்து முற்றாக வெளியேறியுள்ளனர்.
இலங்கை நேரப்படி இன்று அதிகாலை அமெரிக்கப் படைகளில் இறுதி விமானம் காபூல் ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்மூலம் ஆப்கானிஸ்தானில் 20 வருடங்களுக்கு மேலாக நீடித்த அமெரிக்காவின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது.