அமெரிக்க ரொக்கட் தாக்குதல்!! -6 சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் பலி-
ஆப்கானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா நடத்திய ரொக்கட் தாக்குதலில் 6 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறித்த ரொக்கட் தாக்குதலில் உயிர் பிழைத்தவர்களின் உறவினர்கள் மேற்படித் தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
ஜ.எஸ் தற்கொலை குண்டுதாரியை குறிவைத்து மேற்படி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இதில் தாக்குதலுக்குத் திட்டமிட்ட தீவிரவாதகள் 2 பேர் கொல்லப்பட்டதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது.
எனினும் இத்தாக்குதலில் சிறுவர்கள் உள்ளிட்ட அப்பாவிப் பொதுமக்களே கொல்லப்பட்டதாக ஆப்கானில் இருந்து வெளியாகும் தகவல்கள் உறுதிபட தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ரொக்கட் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் சிலர் சர்வதேச அமைப்புகளில் பணியாற்றியவர்கள். சிலரிடம் அமெரிக்கா செல்வதற்கான விசா உள்ளதும் தெரியவந்துள்ளது.
கொல்லப்பட்டவர்களில் சுமையா என்ற இரண்டு வயதுக்கு குழந்தை, பர்சாத் என்ற 12 வயதுச் சிறுவன் உள்ளிட்ட 06 சிறுவர்கள் அடங்குகின்றனர். கொல்லப்பட்டவர்கள் குடும்பமாக அமெரிக்காவுக்குச் செல்வதற்காக விண்ணப்பித்துக் காத்திருந்தனர்.
விமான நிலையத்துக்குச் செல்வதற்கான தொலைபேசி அழைப்புக்காகக் காத்திருந்தவர்கள் என அவர்களின் உறவினர் ஒருவரான அகமதி என்பவர் பி.பி.யிடம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க படையினருக்கு மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றிய நாசர் என்ற மற்றொரு உறவினரும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் அவர் கூறினார். அமெரிக்கா மிகப்பெரிய தவறைச் செய்துவிட்டது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.