SuperTopAds

16 வயது சிறுவனுக்கு அனுமதியின்றி தடுப்பூசி!! -வாயில் நுரை தள்ளி மயங்கி வீழ்ந்தார்-

ஆசிரியர் - Editor II
16 வயது சிறுவனுக்கு அனுமதியின்றி தடுப்பூசி!! -வாயில் நுரை தள்ளி மயங்கி வீழ்ந்தார்-

இந்தியாவில் மத்திய பிரதேச மாநிலத்தில் 16 வயது சிறுவனுக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசி போடப்பட்டதால் அவரின் உடல்நிலை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்நாட்டில் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு இதுவரை தடுப்பூசித் திட்டம் ஆரம்பிக்காத நிலையில் குறித்த சிறுவன் தடுப்பூசி போடப்பட்டது குறித்து அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

அங்குள்ள தடுப்பூசி மையத்தில் குறித்த சிறுவனுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதன்பின் சிறுவனுக்கு தலை சுற்ற ஆரம்பித்துள்ளது. திடீரென மயக்கம் போட்டு விழுந்த சிறுவனுக்கு வாயில் இருந்து நுரை வெளியேறியுள்ளது. உடனடியாக சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.