SuperTopAds

பில்லிங்ஸ் அதிரடியால் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி

ஆசிரியர் - Admin
பில்லிங்ஸ் அதிரடியால் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி

ஐ.பி.எல். 11-வது சீசனின் ஐந்தாவது ஆட்டம் நேற்று இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. 

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

காவிரி பிரச்சினை தொடர்பாக தமிழக கட்சிகள் மற்றும் அமைப்புகள் போராட்டம் நடத்தியதால் இருஅணி வீரர்களும் பலத்த பாதுகாப்புடன் மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டனர். 

நாணய சுழற்சியை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டதலைவர் டோனி பந்து வீச்சு தேர்வு செய்தார். இதையடுத்து கொல்கத்தா அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. 

கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 202 ஓட்டங்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடிய ரசல் 36 பந்தில் 88 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார். இதில் 11 சிக்ஸர்களும், ஒரு பவுண்டரியும் அடங்கும். சென்னை அணியின் வாட்சன் இரண்டு விக்கெட் வீழ்த்தினார். 

இதையடுத்து, சென்னை அணி 203 ஓட்டங்களை இலக்காக கொண்டு களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு இறங்கினர். 

முதலில் இருந்தே இருவரும் சிக்சரும், பவுண்டரியுமாக விளாசினர். இதனால் அணியின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. 

இந்நிலையில் இறுதி ஓவரில் 17 ஓட்டங்கள் தேவைப்பட்டது. பிராவோவும், ஜடேஜாவும் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். இறுதியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

கொல்கத்தா அணி சார்பில் டாம் கர்ரன் 2 விக்கெட்டும், சுனில் நரேன், குல்தீப் யாதவ், பியூஷ் சாவ்லா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.