SuperTopAds

சென்னை வீரர்கள் மீது காலணிகளை வீசிய நாம் தமிழர் கட்சியினர்

ஆசிரியர் - Admin
சென்னை வீரர்கள் மீது காலணிகளை வீசிய நாம் தமிழர் கட்சியினர்

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள்காலணிகளை வீசியது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேட்ச் பிக்சிங் சர்ச்சையில் சிக்கிய இரண்டு ஆண்டு தடைக்கு பின் மீண்டும் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐபிஎல்., தொடரின் ஐந்தாவது லீக் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை நேற்று எதிர்கொண்டது.

இதனிடையே, காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நடந்த போராட்டத்தால், இன்றைய போட்டி ரசிகர்கள் எதிர்பார்த்தது போல் நடைபெறுமா என்று பலரும் எதிர்பார்த்திருந்தனர். இதன்பின் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 202 ரன்கள் குவித்தது.

இதன்பின் களமிறங்கிய சென்னை அணி, 19.5 ஓவரில் சிக்ஸ் அடித்து வெற்றி இலக்கை எட்டி, சாதனைப் படைத்தனர். சிறப்பாக ஆடிய பில்லிங் 23 பந்துகளில் 56 ரன்கள் குவித்தார்.

இந்நிலையில், முதல் இன்னிங்ஸின் 10வது ஓவரை சென்னை அணியின் தாகீர் வீசியபோது, மைதானத்தில் குவிந்திருந்த்வர்களில் சிலர் காலணி (ஷூ) மற்றும் கட்சிக்கொடியை வீசி எறிந்துள்ளனர்.


அப்போது மைதானத்தில் பீல்டிங் செய்து கொண்டிருந்த ஜடேஜா காலணியை எடுத்து காலால் எட்டி உதைத்துள்ளார்.

மேலும், பாப் டூபிளசிஸ் காலணியை எடுத்து ரசிகர்கள் கூட்டத்தைப் பார்த்து காண்பித்து, மிகவும் வருத்தமடைந்தார்.

இந்த செயலால் மைதானத்தில் பதற்றம் நிலவியது. இதையடுத்து, காலணி மற்றும் கட்சிக்கொடி வீசியவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அவர்கள், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.