நாட்டு மக்களிடம் இராணுவ தளபதி விடுத்துள்ள கோரிக்கை..! ஊரடங்கு அல்லது முடக்கத்தினால் பயனில்லை..
நாட்டில் தினசரி கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் ஊரடங்கு அல்லது முடக்கம் ஊடாக கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும் என மக்கள் நினைக்ககூடாது. மக்கள் பொறுப்புடன் நடப்பதே கொரோனா பரவலை தடுக்கும் வழியாகும்.
மேற்கண்டவாறு இராணுவ தளபதியும், தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார். குறித்த விடயம் தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்து தொிவித்த அவர் மேலும் கூறிப்பிடுகையில்,
மக்கள் ஒவ்வொருவரும் சுகாதார விதிமுறைகளைக் கடைப்பிடித்துப் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும். அப்போதுதான் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும். அதேவேளை, கொரோனாத் தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ள மக்கள் அனைவரும் முன்வர வேண்டும்.
எக்காரணம் கொண்டும் தடுப்பூசிகளைப் பெறுவதில் மக்கள் தயக்கம் காட்டக்கூடாது. தடுப்பூசிகள்தான் எமக்குப் பாதுகாப்புக் கவசமாக இருக்கின்றது. தடுப்பூசிகளைப் பெற்றவர்களும் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி
சமூகத்தில் பொறுப்புணர்வுடன் நடக்க வேண்டும்என்றார்.