அமெரிக்க படைகள் வெளியேறுவதில் தாமதமானால் விளைவுகளை சந்திக்க நேரிடும்!! -தலீபான்கள் கடும் எச்சரிக்கை-
ஆப்கானிஸ்தானில் தற்போதுவரை நிலைத்திருக்கும் அமெரிக்கா தங்கள் படைகளை திரும்ப்பெறுவதில் தாமதம் ஏற்பட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என தலீபான்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் அங்கிருந்து தங்கள் படையினர் பெரும்பாலானோரை அமெரிக்கா திரும்பப்பெற்றுவிட்டது. இருப்பினும் மீட்புப்பணிக்கான காபூல் விமான நிலையத்தை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது.
இந்நிலையில் ஒப்பந்ததின்படி ஆகஸ்ட் 31 ஆம் திகதிக்குள் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற வேண்டும் எனவும், அவ்வாறு அமெரிக்கா தங்கள் படைகளை திரும்பபெறுவதில் தாமதம் ஏற்பட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என தலீபான்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.