மெரினாவில் கருணாநிதிக்கு நினைவிடம்!! -மு.க.ஸ்டாலின் அறிவிப்பு-
சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே கலைஞர் கருணாநிதிக்கு 2.21 ஏக்கர் பரப்பளவில் 39 கோடி ரூபா செலவில் நினைவிடம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
கருணாநிதியின் வாழ்க்கை, சிந்தனை குறித்து நவீன ஒளி படங்களுடன் நினைவிடம் அமைக்கப்படும். இன்று நாம் பார்க்கும் தமிழ்நாடு கலைஞர் உருவாக்கியது. 5 முறை முதலமைச்சராக இருந்து தமிழ் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் திட்டத்தை வகுத்தவர் அவர்.
13 முறை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் அவர். வாழ்க்கையில் 60 ஆண்டுகள் சட்டசபை உறுப்பினராக இருந்தவர் அவர். அவருக்கான நினைவிடம் மெரினாவில் வேண்டும் என்றார்.