7 டொன் வெண்டைக்காயை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கிய வியாபாரிகள்!!
இந்தியாவின் கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் அதிக அளவில் வெண்டைக்காய் செய்கையை செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து சுமார் 7 டொன் வெண்டைக்காயை அப்பகுதியை சேர்ந்த வியாபாரியான இளங்கோ மற்றும் அவரது குழுவை சேர்ந்த வியாபாரிகள் கொள்முதல் செய்தனர்.
ஆனால் திடீரென வெண்டைக்காய் விலை வீழ்ச்சி அடைந்ததால், இவர்களிடம் இருந்து வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட வியாபாரிகள் எவரும் வெண்டைக்காயை கொள்முதல் செய்யவில்லை.
இதனால் வெண்டைக்காயை விற்பனை செய்ய முடியாமல் வியாபாரிகள் தவித்து வந்தனர். இதனால் அந்த வெண்டைக்காய்களை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று திங்கட்கிழமை உளுந்தூர்பேட்டைக்கு வந்த அவர்கள் கூவி, கூவி அந்த வெண்டைக்காயை இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கினர்.