SuperTopAds

கொரோனா பொதுமுடக்கம் மற்றும் தடுப்பு செயற்பாடு தொடர்பில் ஆராய கல்முனை முதல்வர் கண்காணிப்பு நடவடிக்கை

ஆசிரியர் - Editor III
கொரோனா பொதுமுடக்கம் மற்றும் தடுப்பு செயற்பாடு தொடர்பில் ஆராய கல்முனை முதல்வர் கண்காணிப்பு நடவடிக்கை

கொரோனா அனர்த்த நிலைமையினை அடுத்து நாட்டில் தற்போது  அறிவிக்கப்பட்டுள்ள  பொதுமுடக்கம்  மற்றும்  கொரோனா தடுப்பு செயற்பாடு தொடர்பில் ஆராய்வதற்காக   கண்காணிப்பு நடவடிக்கை ஒன்றினை   கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட  பகுதிகளுக்கு  கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையிலான குழுவினர்   இன்று மேற்கொண்டிருந்தனர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை(20) 10 மணிமுதல் அமுலுக்கு வந்துள்ள பொதுமுடக்கம் காரணமாக பொதுமக்கள் அத்தியவசியத் தேவை தவிர்ந்து வழமையாக வெளியில் நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.

இன்று  அம்பாறை மாவட்டத்தின்  கல்முனை மாநகர சபை  பிரதேசங்களிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மக்கள் முழுமையாக கடைப்பிடித்து வருகின்றார்களா என்பதை ஆராய்வதற்காக கல்முனை இராணுவ  மேஜர் சாந்த விஜேயகோன் உள்ளிட்ட இராணுவ அதிகாரிகள் குழுவுடன் இணைந்து    கல்முனை ,பெரியநீலாவணை, நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு, மருதமுனை  , சேனைக்குடியிருப்பு ,சாய்ந்தமருது ,உள்ளிட்ட பகுதிகளுக்கும்  கரையோர பிரதேசங்களில் உள்ள முக்கிய  பொது இடங்களிற்கும் சென்று மக்களை அறிவுறுத்தியதுடன் பொதுமுடக்க நேரத்தில் அனுமதி இன்றி வியாபார நடவக்கையில் ஈடுபட்ட  வியாபார உரிமையாளர்களுக்கும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அத்துடன் கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட இலங்கை அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மதித்து மக்கள்  வீடுகளில் முடங்கி உள்ளதுடன் அத்தியவசிய சேவை வழமைபோன்று இயங்கிவருவதுடன் மருந்தகங்கள் திறந்துள்ளதை காண முடிகிறது.

தற்போதைய சூழ்நிலையில்   பொது மக்கள் சுகாதார வழிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் மீறுபவர்கள் மீதி கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதோடு முகக்கவசம்இ சமூக இடைவெளி போன்றவகளை கண்டிப்பாக கடைப்பிடிப்பது தொடர்பிலும்  பொதுமக்களுக்கு கல்முனை மாநகர முதல்வருட்ன வருகை தந்த அதிகாரிகள்  தெளிவு படுத்தினர்.