செல்வச்சந்நிதி முருகன் தேர்திருவிழா!

வரலாற்று பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த தேர்திருவிழா இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றது.
இதன்போது, முருகப்பெருமான் சிறிய தேரில் உள்வீதி வலம் வந்தார். சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களோடு சிறப்பாக தேர் உற்சவம் இடம்பெற்றது.