SuperTopAds

நகரில் உள்ள வர்த்தக நிலையங்களை மறு அறிவித்தல் வெளியாகும்வரை பூட்டுவதற்கு வர்த்தக சங்கம் தீர்மானம்!

ஆசிரியர் - Editor I
நகரில் உள்ள வர்த்தக நிலையங்களை மறு அறிவித்தல் வெளியாகும்வரை பூட்டுவதற்கு வர்த்தக சங்கம் தீர்மானம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் நுாற்றுக்கணக்கானவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் மேலும் தொற்று பரவலடைவதை தடுப்பதற்காக நகரில் உள்ள வர்த்தக நிலையங்களை பூட்டுவதற்கு வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளது. 

குறித்த நடவடிக்கை நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) தொடக்கம் நடைமுறைக்கு வரும் என்றும் மறு அறிவித்தல் வரை கிளிநொச்சி வர்த்தக நிலையங்கள் மூடப்படும் என்றும் வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது. 

இதேவேளை கிளிநொச்சி சேவைச் சந்தையும் இன்று முதல் கரைச்சி பிரதேச சபையினால் மூடப்பட்ட நிலையில் வர்த்தக நடவடிக்கைகள் பொது இடங்களில் சுகாதார நடைமுறைகள் இறுக்கமாகப் பின்பற்றப்பட்டு முன்னெடுக்கப்பட்டிருந்தன.

நாட்டில் நேற்று வரையில் 35 நகரங்களின் வர்த்தக நடவடிக்கைகளை முடக்கி வர்த்தகர்கள் கொரோனாப் பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.