SuperTopAds

தி.மு.க.வின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு!! -சட்டப்பேரவையிலிருந்து அ.தி.மு.க வெளிநடப்பு-

ஆசிரியர் - Editor II
தி.மு.க.வின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு!! -சட்டப்பேரவையிலிருந்து அ.தி.மு.க வெளிநடப்பு-

ஜனநாயக விரோத செயற்பாடுகளில் தி.மு.க. அரசு ஈடுபட்டுள்ளதால் சட்டப்பேரவையிலிருந்து அ.தி.மு.கவினர் சபையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர். 

இன்று புதன்கிழமை காலை கலைவாணர் அரங்கத்தில் தமிழக சட்டப்பேரவை கூடியது. அதன்போது கொடநாடு விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் தி.மு.க உறுப்பினர்களுக்கும், அ.தி.மு.க உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

இதைத்தொடர்ந்து கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை மீண்டும் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து அ.தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். சபையிலிருந்து வெளியேறிய அவர்கள் சட்டப்பேரவைக்கு வெளியே வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.