SuperTopAds

பொதுச்சந்தை மற்றும் பிரதேச செயலக காணி பிரிவு ஆகியன முடக்கப்பட்டது! சடுதியாக தொற்றாளர் அதிகரிப்பால் சுகாதார பிரிவு நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I
பொதுச்சந்தை மற்றும் பிரதேச செயலக காணி பிரிவு ஆகியன முடக்கப்பட்டது! சடுதியாக தொற்றாளர் அதிகரிப்பால் சுகாதார பிரிவு நடவடிக்கை..

கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்திருக்கும் நிலையில் கிளிநொச்சி சேவை சந்தை மற்றும் கரைச்சி பிரதேச செயலக காணி பிரிவு ஆகியன முடக்கப்பட்டுள்ளது. 

சேவை சந்தை முடக்கம் நாளை முதல் நடைமுறைக்கு வரும் என்றும் பொருத்தமான பொது இடங்களில் வியாபார நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் 

கரைச்சி பிரதேச சபை அறிவித்துள்ளது.வியாபாரிகளும் மக்களும் சுகாதார நடைமுறைகைகளை உரிய வகையில் பின்பற்றி நடந்துகொள்ளுமாறும் 

பிரதேச சபை அறிவுறுத்தியுள்ளது. மேலும் பிரதேச செயலக காணி பிரிவு முடக்கப்பட்டிருக்கின்றது. 

காணிக்கிளையில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் மூவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்தே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

குறித்த நடவடிக்கை எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை தொடரும் என்றும் ஏனைய ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் 

எதிர்வரும் திங்கள் கிழமை மீளத் திறப்பது குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.