தலீபான்களுடன் நட்புடன் செயல்படத் தயார்!! -சீனா அதிரடி முடிவு-
சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின் ஆப்கானிஸ்தான் மீண்டும் தலீபான்கள் வசம் சென்றுள்ள நிலையில் அவர்களுடன் நட்புடன் செயல்படத் தயார் என்று சீனா அறிவித்துள்ளது.
அந்நாட்டில் நடந்த ஆயுதப் போரில் தலீபான்கள் வென்றுள்ளதாக ஆப்கன் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனாதிபதி அஷ்ரப் கானி நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அந்நாட்டில் அசாதாரண சூழல் நிலவுகிறது. தலீபான்கள் வசம் ஆப்கான் சென்றுள்ளதால், தூதரகங்களை மூடிவிட்டு வெளியேற அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆயத்தமாகி வருகின்றன.
இந்த நிலையில், தலீபான்களுடன் நட்பு ரீதியிலான உறவுகளை மேம்படுத்த தயாராக இருப்பதாக சீனா அறிவித்துள்ளது. ஏற்கனவே, தலீபான்களை அங்கீகரிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.