தொடரும் தலிபான்களின் வெற்றி நடை!! -ஆப்கானின் ஜலாலாபாத் நகரையும் கைப்பற்றினர்-
ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களில் ஒன்றாக கருதப்படும் ஜலலாபாத் நகரத்தையும் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.
இதன் மூலம் தலைநகர் காபூலை தவிர ஏனைய பெரும்பாலான நகரங்கள் தலிபான்கள் தமது கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன.
அந்நாட்டின் முக்கியமான மாகாணங்களில் ஒன்று நகர்கார். இந்த மாகாணத்தின் தலைநகர்தான் ஜலாலாபாத். இது பொருளாதார ரீதியாக மிகவும் முன்னேறிய நகரங்களில் ஒன்று. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தையும் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலையும் இணைக்கும் சாலை ஜலாலாபாத் வழியேதான் அமைக்கப்பட்டுள்ளது.
காபூலுக்கு கிழக்கே இந்த ஜலாலாபாத் அமைந்துள்ளது. தற்போது இந்த நகரத்தை தாலிபான்கள் கைப்பற்றி உள்ளமை குறிப்பிடத்தக்கது.