இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினம் இன்று!! -செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய மோடி-

ஆசிரியர் - Editor II
இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினம் இன்று!! -செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய மோடி-

இந்தியா முழுவதும் இன்று ஞாயிற்றுக்கிழமை 75 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் முக்கிய நிகழ்வுவாக தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் சுதந்திர தின விழா வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது. 

காலையில் தனது இல்லத்தில் இருநது புறப்பட்ட பிரதமர் மோடி, முதலில் மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்

பின் விழா நடைபெறும் செங்கோட்டைக்கு வந்து சேர்ந்தார்.  பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இணை மந்திரி அஜய் பட், பாதுகாப்பு செயலாளர் டாக்டர் அஜய் குமார் ஆகியோர் பிரதமரை வரவேற்றனர். அதன்பின்னர் பிரதமருக்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்

அதன்பின்னர், பிரதமர் நரேந்திர மோடி மூவர்ண தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். அப்போது தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். தேசியக் கொடி ஏற்றும் போது முதல் முறையாக இரு விமான படை விமானங்கள் மூலம் மலர்கள் துவப்பட்டன. 

விழாவில் மத்திய அமைச்சர்கள், முப்படைகளின் தலைவர்கள், உயர் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள் என பலர் பங்கேற்றனர்.