SuperTopAds

வீதியில் விழுந்து உயிரிழந்த பிரதேசசபை ஊழியர் உட்பட இருவர் கொரோனா தொற்றினால் மரணம்!

ஆசிரியர் - Editor I
வீதியில் விழுந்து உயிரிழந்த பிரதேசசபை ஊழியர் உட்பட இருவர் கொரோனா தொற்றினால் மரணம்!

கிளிநொச்சியில் வீதியில் விழுந்து உயிரிழந்த பிரதேசசபை ஊழியர் உட்பட இருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது. 

இதன்படி 75 வயதுடைய அழகம்மா என்ற பெண் மற்றும் 47 வயதுடைய விஜயகுமார் ஆகிய இருவரின் மாதிரிகள் பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பட்டது.

அவற்றின் முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளன. அதன் அடிப்படையில், நேற்றுமுன்தினம் வீதியில் வீழ்ந்து உயிரிழந்த கரைச்சி பிரதேச சபை ஊழியரான விஜயகுமார் 

கொரோனாத் தொற்றின் பாதிப்பினாலேயே உயிரிழந்துள்ளை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேவேளை கிளிநொச்சியில் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

196 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட எழுமாற்றான பரிசோதனையிலேயே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் அண்மைய நாட்களாக பெருமளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மாவட்டத்தில் மிகத் தீவிரம் பெற்றுள்ள கொரோனா அபாயம் குறித்து மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுமாறு சுகாதார பிரிவு அறிவுறுத்தியுள்ளது.