SuperTopAds

கொரோனா தோற்றம் குறித்து மீண்டும் விசாரணை!! -அடியோடு நிராகரிக்கும் சீனா-

ஆசிரியர் - Editor II
கொரோனா தோற்றம் குறித்து மீண்டும் விசாரணை!! -அடியோடு நிராகரிக்கும் சீனா-

உயிர் கொல்லி கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து மேலும் விசாரிக்க உலக சுகாதார நிறுவனம் முன் மொழிந்த திட்டத்தை சீனா அரசாங்கம் முற்றுமுழுதாக  நிராகரித்துள்ளது. 

மேலும் குறித்த விசாரணை முற்றிலும் தேவையற்றது எனவும் சீனா அரசு மேலும் தெரிவித்துள்ளது.

உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் முதன் முதலாக சீனாவின் உகான் நகரில்தான் கண்டறியப்பட்டது. உகான் நகரில் உள்ள ஆய்வுக்கூடத்தில் இருந்து வைரஸ் பரவியிருக்கலாம் என்று அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் சந்தேகம் எழுப்பின. 

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு குழு ஒன்று அமைத்தது. வைரசின் பிறப்பிடம் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட இந்தக் குழு சீனாவிலு ஆய்வு மேற்கொண்டது. முதல் கட்ட விசாரணையில் சீன ஆய்வகத்தில் இருந்து கொரோனா பரவவில்லை என தெரிய வந்தது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இவ்விவகாரம் குறித்து மீண்டும் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை கொரோனா பாதிப்பு குறித்த மூல தரவுகளை பகிருமாறு சீனாவை உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியது.  

இருப்பினும் இதை நிராகரித்த சீனா, “இந்த திட்டம் அரசியல் சார்ந்தது எனவே அதை ஒப்புக்கொள்ள மாட்டோம் என சீனா தெரிவித்துள்ளது.