ஆப்கானிஸ்தான் தலைநகருக்கு 3000 இராணுவத்தை அனுப்ப அமெரிக்கா தீர்மானம்!!
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகருக்கு மூவாயிரம் துருப்புக்களை அனுப்புவதற்கு அமெரிக்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
காபூலில் உள்ள அமெரிக்க தூதரக பணியாளர்கள் உள்ளிட்ட தரப்பினரை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காக துருப்பினர்கள் அங்கு அனுப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க பிரஜைகளின் இருப்பை குறைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இராஜாந்திர அதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினரை வெளியேற்றுவதற்காக மூவாயிரம் துருப்பினர் அங்கு அனுப்பப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதுரகம் உள்ளிட்ட இராஜதந்திர பாதுகாப்பு செயற்பாடுகளுக்காக 650 அமெரிக்க துருப்பினர் தற்போது ஆப்கானிஸ்தானில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.