SuperTopAds

தினசரி கொரோனா தொற்று மீண்டும் 40,000ஜ கடந்தது!! -இந்தியாவில் நிலைமை மோசமடைகிறது-

ஆசிரியர் - Editor II
தினசரி கொரோனா தொற்று மீண்டும் 40,000ஜ கடந்தது!! -இந்தியாவில் நிலைமை மோசமடைகிறது-

இந்தியா நாட்டில் மீண்டும் தினசரி கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாபவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அந்நாட்டில் கொரோனா தொற்றின் 2 ஆவது அலை ஓய்ந்து வந்த நிலையில், இந்த மாத ஆரம்பத்தில் இருந்து தினசரி பாதிப்பு ஏறுமுகம் கண்டு வருகிறது.

இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், அங்கு நேற்று காலை 6 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் புதிதாக 41 ஆயிரத்து 195 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,20,77,706 ஆக அதிகரித்துள்ளது. இது நேற்று முன்தினத்தில் பதிவான தொற்றாளர்களை விட 2,842 அதிகம்.

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 490 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,29,669 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.34மூ ஆக உள்ளது.

குறித்த காலப்பகுதியில் தொற்றிலிருந்து 39,069 பேர் குணமடைந்தனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,12,60,050  ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 97.45 ஆக உயர்ந்துள்ளது.