இந்தியாவின் 12 நகரங்கள் நீருக்குள் மூழ்கும் அபாயம்!!

ஆசிரியர் - Editor II
இந்தியாவின் 12 நகரங்கள் நீருக்குள் மூழ்கும் அபாயம்!!

இந்தியாவில் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றம் காரணமாக எதிர்வரும் 2100 ஆம் ஆண்டுக்குள் கடலோரப் பகுதியில் உள்ள 12 நகரங்கள், சராசரியாக 3 மீற்றர் அளவு நீருக்குள் மூழ்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய பருவநிலை மாற்றம் குறித்த அரசாங்கங்களுக்கு இடையிலான குழுவின் அறிக்கையின் அடிப்படையில், கடல் நீர் மட்டம் உயர்வது குறித்த தரவுகளை, நாசா வெளியிட்டுள்ளது.

இதில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது. பருவநிலை மாற்றம் காரணமாக இமயமலை உள்ளிட்ட பனிமலைகளில் பனிப்பாறைகள் உருகும் விகிதம் அதிகரித்துள்ளது. இதனால் மேற்படி ஆபத்து ஏற்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.