குரங்கை முழுதாக விழுங்கிய 10 அடி மலைப்பாம்பு!!
இந்தியாவின் குஜராத் வதோதராவில் உள்ள ஒரு சிறிய ஆற்றங்கரையில் இருந்து சுமார் 10 அடி நீளமுள்ள மலைப் பாம்பு ஒன்றை அம்மாநில வனத்துறை அலுவலர்கள் நேற்று திங்கட்கிழமை மீட்டுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்கையில்:-
குறித்த பகுதியில் மாலைப்பாம்பு ஒன்று இரையை விழுங்கிய நிலையில் நகர முடியாமல் இருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்று விசாரித்த போது, அந்த பாம்பு குரங்கை விழுங்கியது தெரியவந்தது.
பாம்பை வனத்துறை அதிகாரிகள் மீட்டனர். விழுங்கிய குரங்கை அந்த பாம்பு வாந்தி எடுத்தது. தற்போது, நல்ல உடல்நலையில் உள்ளது. அனுமதி பெறப்பட்ட பின் ஜம்புகோட வனவிலங்கு சரணாலயத்தில் மலைப் பாம்பு விடப்படும் என்றார்.