வேகமாக முன்னேறும் தலிபான்கள்!! -ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கர்களை உடன் வெளியேறுமாறு பணிப்பு-
ஆப்கானிஸ்தானில் உள்ள முக்கியமான பல நகரங்களைக் கைப்பற்றி, வேகமாக தலிபான்கள் முன்னேறும் நிலையில் அங்கு பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவதாக காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில் அந்நாட்டில் உள்ள அனைத்து அமெரிக்கர்களையும் மிக விரைவில் நாட்டை விட்டு வெளியேறுமாறும் அமெரிக்க தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
கடந்த 20 வருடங்களாக ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த அமெரிக்கப் படைகள், ஆப்கான் அரசுக்கு அளித்துவந்த இராணுவ ஆதரவைக் கைவிட்டு அங்கிருந்து வெளியேறிவிட்டன.
இந்நிலையில் பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றி தலிபான்கள் வேகமாக முன்னேறி வருகின்றனர்.
குறிப்பாக அண்மைக் காலங்களில் மட்டும் தலிபான்கள் 6 மாகாண தலைநகரங்களைக் கைப்பற்றியுள்ளனர். தொடர்ந்து நடைபெறும் கடும் சண்டைகளுக்கு மத்தியில் தலிபான்கள் வேகமாக முன்னேறி வருகின்றனர். நாட்டின் 34 மாகாணங்களில் தற்போது கடும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.