டெல்டா பிளஸ் வைரஸ்!! -தென் கொரியாக்கு வந்த புதிய சிக்கல்-

ஆசிரியர் - Editor II
டெல்டா பிளஸ் வைரஸ்!! -தென் கொரியாக்கு வந்த புதிய சிக்கல்-

தென் கொரியா நாட்டில் இரண்டு டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

கொரோனா வைரஸில் டெல்டா வைரஸ் மரபணு மாற்றத்தால் உருவான டெல்டா பிளஸ் வைரஸ் அந்நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளமை இதுவே முதல் முறை என நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

டெல்டா பிளஸ் தொற்றாளர்களில் 40 வயதுடைய நபர் ஒருவர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டில் இதுவரை புதிய கொரோனா வைரஸின் 4 முக்கிய வகைகளில் 6,016 தொற்றாளர்களை உறுதி செய்துள்ளது. இதில் 2,983 பேர் டெல்டா வைரஸ் தொற்றாளர்களாவர்.

செவ்வாய்க்கிழமை அன்று அந்நாட்டில் 39 சதவிகிதம் பேருக்கு முதலாம் கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதேவேளை 14.1 வீதமானவர்களுக்கு பேருக்கு  முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு