பங்களாதேஷிடம் வீழ்ந்தது அவுஸ்திரேலியா!!

ஆசிரியர் - Editor II
பங்களாதேஷிடம் வீழ்ந்தது அவுஸ்திரேலியா!!

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ரி-20 போட்டியில் பங்களாதேஷ் அணி 23 ஓட்டங்களினால் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்களாதேஷ் 1:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

அவுஸ்திரேலிய அணி பங்களாதே{க்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு பங்களாதேஷ் அணியுடன் ரி-20 போட்டிகளில் விiளையாடி வருகின்றது. இத் தொடரின் முதல் போட்டி செவ்வாயன்று இரவு டாக்காவில் ஆரம்பமானது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய பந்துவீச்சை தேர்வு செய்ய, பங்களாதேஷ் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது. அதன்படி அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 131 ஓட்டங்களை பெற்றது.

132 என்ற இலகுவான வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 108 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

பந்து வீச்சில் பங்களாதேஷ் சார்பில் நசும் அஹமட் 19 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், முஸ்தபிசுர் ரஹ்மான், இஸ்லாம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், மெய்டி ஹசான் மற்றும் ஷாகிப் அல் ஹசன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு