ஒலிம்பிக்கில் 29 தங்கப் பதக்கங்களுடன் முதலிடத்தில் சீனா!!
நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2020 டோக்கியோ ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் நேற்று வரையான நிலவரத்தின்படி சீனா 29 தங்கப் பதக்கங்களை பெற்று முதலிடத்தில் உள்ளது.
குறிப்பாக சீனா 29 தங்கம், 17 வெள்ளி மற்றும் 16 வெண்கலம் ஆகியவற்றை பெற்று, மொத்தமாக 62 பதக்கங்களுடன் முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்கா 22 தங்கம், 25 வெள்ளி மற்றும் 17 வெண்கலம் ஆகியவற்றை பெற்று, மொத்தமாக 64 பதக்கங்களுடன் 2 ஆம் உள்ளது.
ஜப்பான் 17 தங்கம், 6 வெள்ளி மற்றும் 10 வெண்கலம் ஆகியவற்றை பெற்று, மொத்தமாக 33 பதக்கங்களுடன் 3 ஆம் இடத்தில் உள்ளது. அவுஸ்திரேலியா 14 தங்கம், 4 வெள்ளி மற்றும் 15 வெண்கலம் ஆகியவற்றை பெற்று, மொத்தமாக 33 பதக்கங்களுடன் 4 ஆவது இடத்தில் உள்ளது.
ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி 12 தங்கம், 21 வெள்ளி மற்றும் 17 வெண்கலம் ஆகியவற்றை பெற்று, மொத்தமாக 50 பதக்கங்களுடன் 5 ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.