சீனாவின் 15 நகரங்களில் டெல்டா வைரஸ்!! -வெளிவருகிறது அதிர்ச்சி தகவல்கள்-
கொரோனா தொற்றை முழுமையாக கட்டுப்பட்டிற்குள் கொண்டுவந்துவிட்டோம் என்று அறிவித்துள்ள சீனா நாட்டில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது மிக மோசமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்நாட்டின் நான்ஜிங் விமான நிலையத்தில் ரஷ்யாவில் இருந்து வந்த துப்புரவு பணியாளர் ஒருவரிடம் இந்த டெல்டா வகை வைரஸ் முதலில் கண்டறியப்பட்டது.
இதனால் நான்ஜிங்கில் இருந்து விமான சேவைகள் இரு வார காலத்துக்கு நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் நான்ஜிங் நகரில் கொரோனா பரிசோதனைகள் கடுமையாக்கப்பட இருப்பதாகவும் சீனா நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நான்ஜிங்கில் இருந்து தற்போது பீஜிங் உட்பட 15 நகரங்களுக்கு இந்த டெல்டா வகை வைரஸ் பரவி இருக்கிறது. பீஜிங்கில் கடந்த 175 நாட்களுக்கு பின் தொற்றாளர்களின் எண்ணிக்கை மிகவேகமாக அதிகரித்திருக்கிறது.
அந்நாட்டில் இதுவரை கொரோனா தொற்றால் 92,875 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, இதுவரை மொத்தம் 4,636 பேர் சீனாவில் கொரோனாவால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.