குசல்-தனுஷ்க-திக்வெல்ல சர்வதேச போட்டிகளில் பங்கேற்க 1வருட தடை!! -ஒரு கோடி ரூபா அபராதம் விதிப்பு-

ஆசிரியர் - Editor II
குசல்-தனுஷ்க-திக்வெல்ல சர்வதேச போட்டிகளில் பங்கேற்க 1வருட தடை!! -ஒரு கோடி ரூபா அபராதம் விதிப்பு-

இங்கிலாந்து கிரிக்கெட் அணியுடன் விளையாட சென்றிருந்த போது உயிர்க்குமிழி நடைமுறைகைளை மீறிய நடமாடியதால் தொடரில் இருந்து இடைநிறுத்தப்பட்டு திருப்பி அழைக்கப்பட்டிருந்த 3 வீரர்களுக்கும் விதிக்கப்பட்டுள்ள தண்டனை தொடர்பான விபரங்களை ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

இதன்படி இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களான குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக்க மற்றும் நிரோசன் திக்வெல்ல ஆகியோருக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க ஒரு வருட தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கும் 6 மாத தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், மேற்படி மூவருக்கும் தலா 10 மில்லியன் ரூபா அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமல்லாமல் ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டினால் பரிந்துரை செய்யப்படும் வைத்தியர் ஒருவரிடம் கட்டாயமாக ஆலோசனை பெறுமாறும் குறித்த மூவருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு