ஒலிம்பிக்கில் வெற்றிநடை போடும் சிந்து!! -ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்தார்-
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஜப்பான் வீராங்கனையை 21-13, 22-20 என்ற கணக்கில் வெற்றி பெற்ற சிந்து ஒலிம்பிக் ஒற்றையர் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளார்.
32 ஆவது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றது.
இந்த தொடரில் இதுவரை ஒரு செட்டை இழக்காமல் வீறுநடை போடும் சிந்து கால்இறுதியில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையும், தற்போது 5 ஆவது இடம் வகிப்பவருமான அகானே யமாகுச்சியை (ஜப்பான்) இன்று வெள்ளிக்கிழமை எதிர்கொண்டார்.
இதில் சிந்து ஜப்பான் வீராங்கனையை 21-13, 22-20 என்ற கணக்கில் வென்றார், இதன் மூலம் அவர் ஒலிம்பிக் ஒற்றையர் அரையிறுதிக்குள் நுழைந்தார். இதனால் அவருக்கு பதக்கம் உறுதியாகி உள்ளது.