வாய்க்கால்களை காணவில்லை!! -வடிவேல் பாணியில் முறைப்பாடு செய்த விவசாயிகள்-

ஆசிரியர் - Editor II
வாய்க்கால்களை காணவில்லை!! -வடிவேல் பாணியில் முறைப்பாடு செய்த விவசாயிகள்-

இந்தியாவின் தமிழகம் - திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் குடகனாறு பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் வேடசந்தூர் பொலிஸ் நிலையில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்தனர். 

அந்த முறைப்பாட்டில் வேடசந்தூர் அருகே கிரியம்பட்டியில், குடகனாற்றுக்கு குறுக்கே உள்ள வெங்கட்டராமன் அய்யங்கார் அணைக்கட்டில் இருந்து செல்லும் பாசன வாய்க்கால் மற்றும் லட்சுமணம்பட்டி அணைக்கட்டில் இருந்து செல்லும் இடதுபுற நீர்பாசன வாய்க்கால்கள் ஆக்கிரமிப்புகளால் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளனர்.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் முறைப்பாடு செய்த போதிலும், எவ்வித பயனும் இல்லாத காரணத்தால் வாய்க்கால்களை கண்டுபிடித்து தர வேண்டும் என்று விவவாசியகள் கோரியிருந்தனர். 

வைகைப்புயல் நடிகர் வடிவேலு திரைப்படம் ஒன்றில், கிணற்றை காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்ததை போன்று வாய்க்கால்களை காணவில்லை என்று விவசாயிகள் முறைப்பாடு அளித்தமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு