ஒலிப்பிக்கில் இலங்கையின் அடுத்த எதிர்பார்ப்பும் இன்று தகர்ந்தது!!
டோக்கியோ நகரில் நடைபெற்றுவரும் 32 ஆவது ஒலிம்பிக் திருவிழாவின் 8 ஆவது நாளான இன்று வெள்ளிக்கிழமை மகளிருக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையின் நிமாலி லியனாரச்சி பங்கேற்றார்.
இப் போட்டியின் தகுதிச்சுற்றில் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், அவரோ ஓடிய 8 வீராங்கனைகளில் எட்டாவது இடத்தைப் பிடித்து பெருத்த ஏமாற்றத்தையே தந்தார்.
நிமாலி லியனாரச்சி பந்தயத் தூரத்தை 2 நிமிடங்கள் 10.23 செக்கன்களில் ஓடி முடிக்க, முதலிடம் பிடித்த அமெரிக்காவின் ரொஜர்ஸ் ரெவ்யன் 2 நிமிடங்கள் 01.42 செக்கன்களில் ஓடி முடித்தார்.