SuperTopAds

133 யோகாசனங்கள் செய்து அசத்தும் 7 வயது சிறுமி

ஆசிரியர் - Editor II
133 யோகாசனங்கள் செய்து அசத்தும் 7 வயது சிறுமி

இந்தியா நாட்டின் திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்த் 2 ஆம் வகுப்பு படிக்கும் சமந்தா என்ற 7 வயது சிறுமி அங்குள்ள திருவருட்பா ஆச்சிரமத்தில் யோகாசனங்களை செய்தார். 

கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியும் திருக்குறளில் 133 அதிகாரங்கள் உள்ளதை போல் 133 யோகாசனங்கள் செய்து விழிப்புணர்வு மற்றும் உலக சாதனை முயற்சியை மேற்கொண்டார்.

குறிப்பாக அச் சிறுமி சமந்தா பத்மாசனம், ஜானுசிரசாசனம், யோகமுத்ரா, பர்வதாசனம், யோகபார சிரசாசனம், தனுராசனம் உள்பட 133 யோகாக்களை செய்து காண்பித்து அசத்தினார்.