SuperTopAds

தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது!!

ஆசிரியர் - Editor II
தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது!!

இந்தியாவின் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இங’கு கோவேக்ஸின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசு ஒதுக்கீடு மற்றும் மாநில அரசு கொள்முதல் மூலம் இதுவரை 2 கோடியே 4 இலட்சத்து 66 ஆயிரத்து 360 தடுப்பூசிகள் அங்கு வந்துள்ளன.

இவற்றில் 2 கோடியே 79 இலட்சத்து 887 தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்திற்கான ஒதுக்கீட்டில், 53 இலட்சத்து 83 ஆயிரத்து 694 டோஸ் தடுப்பூசிகள் மத்திய அரசு வழங்கிய நிலையில், நேற்று மேலும் 3 இலட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன. அவை மாவட்ட வாரியாக பிரித்து அனுப்பப்பட்டன.