மலிங்காவுடன் இணைந்த மார்க்கண்டே
ஐ.பி.எல். தொடரின் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் அறிமுக சுழற்பந்து வீச்சாளரான மாயன்க் மார்க்கண்டே, அணியின் முன்னாள் பந்து வீச்சாளரான லசித் மாலிங்கவின் சாதனையுடன் இணைந்துள்ளார்.
மும்பை அணிக்காக, அறிமுக போட்டியிலேயே சிறந்த பந்து வீச்சை பதிவுசெய்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை மாயன்க் மார்க்கண்டே பதிவுசெய்துள்ளார்.
சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான முதலாவது லீக் போட்டியில், 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் அவர் இந்த சாதனைப்படடியில் இணைந்துள்ளார்.
இதற்கு முன்னதாக இலங்கை அணியின் அதிவேக பந்து வீச்சாளரான லசித் மாலிங்க, மும்பை அணிக்காக, அறிமுக போட்டியிலேயே 15 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதே முதல் சாதனையாக பதிவாகியுள்ளது.
இருப்பினும், துரதிஷ்டவசமாக இம்முறை மும்பை இந்தியன்ஸ் அணி, மாலிங்கவை ஏலத்தில் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.