திருநங்கையருக்கு தனியான கழிப்பறை!! -நீதிமன்றம் விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு-
இந்தியாவின் புதுடெல்லியில் திருநங்கையருக்கு தனியாக கழிப்பறைகளை அமைத்து தரக்கோரி தாக்கல்செய்யப்பட்ட பொது நல மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அது குறித்து பதிலளிக்க மத்திய மற்றும் டில்லி அரசுகளுக்கு அறிவித்துள்ளது.
டெல்லி உயர் நீதிமன்றத்தில் சட்ட கல்லூரி மாணவியான ஜாஸ்மின் கவுர் சாப்ரா பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில் மைசூரு, லூதியானா, போபால் உள்ளிட்ட நகரங்களில் திருநங்கையருக்கு தனியாக பொது கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
இருப்பினும் டெல்லியில் இதுவரை கட்டப்படவில்லை. ஆண் கழிப்பறைகளை திருநங்கையர் உபயோகிக்கும்போது அவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.
எனவே டில்லியில், அவர்களுக்காக தனி கழிப்பறைகள் கட்டப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை நேற்று விசாரணைக்கு ஏற்ற உயர் நீதிமன்றம், இது குறித்து பதிலளிக்க மத்திய மற்றும் டெல்லி அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.