SuperTopAds

வங்கக்கடலில் மீண்டும் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!! -கண மழைக்கு வாய்ப்பு-

ஆசிரியர் - Editor II
வங்கக்கடலில் மீண்டும் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!! -கண மழைக்கு வாய்ப்பு-

வங்கக்கடலில் மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:-வடக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் உத்தரகண்ட், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்கு வங்கம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு வானிலை மையம் மேலும் தகவல் தெரிவித்துள்ளது.