கனடா ஆளுநர் நாயகமாக பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த மேரி சைமன் பதவியேற்றார்!!
கனடாவின் வரலாற்றின் முதன் முறையாக ஆளுநர் நாயகமாக பழங்குடி இனுக் சமூகத்தைச் சேர்ந்த மேரி சைமன் பதவியேற்றார்.
நேற்று நடைபெற்ற காலாசார மற்றும் பாரம்பரிய நிகழ்வுகளைத் தொடர்ந்து கனடாவின் 30 ஆவது ஆளுநர் நாயாகமாக அவர் தனது பதவியை ஏற்றுக் கொண்டுள்ளார்.
இனுக் பழங்குடி சமூக முக்கிய தலைவரும் முன்னாள் டென்மார்க்கிற்கான கனேடிய தூதராகப் பணியாற்றியவருமான மேரி சைமன் சமூக, சுற்றுச்சூழல் ஆர்வலரும் மனித உரிமைகள் வழக்கறிஞருமாவார் என்பது குறிப்பிடத்தக்கது.