SuperTopAds

முதலமைச்சர் பதவியை தூக்கி எறிந்த எடியூரப்பா: காரணம் என்ன?

ஆசிரியர் - Admin
முதலமைச்சர் பதவியை தூக்கி எறிந்த எடியூரப்பா: காரணம் என்ன?

கர்நாடக முதலமைச்சர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்துள்ளார். கர்நாடகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 26-ந் திகதி எடியூரப்பா 4-வது முறையாக முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். 75 வயதை தாண்டிய தலைவர்களுக்கு பாஜகவில் கட்டாய ஓய்வு அளிக்கப்படுகிறது.

ஆனால் அதில் இருந்து 76 வயதான எடியூரப்பாவுக்கு விலக்கு அளித்து அவருக்கு முதல்-மந்திரி பதவியை பாஜக மேலிடம் வழங்கியது. அப்போதே 2 ஆண்டுகள் முடிந்ததும் முதல்-மந்திரி பதவியை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.

அந்த நிபந்தனையை எடியூரப்பா ஏற்றுக் கொண்டார். அதன்படி எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்று இன்றுடன் (திங்கட்கிழமை) 2 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 

கடந்த 16-ந் திகதி டெல்லி சென்ற எடியூரப்பா, பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை நேரில் சந்தித்து பேசினார்.

அப்போது 2 ஆண்டுகள் நிறைவடைவதால் நிபந்தனைப்படி முதல்-மந்திரி பதவியை விட்டு விலகுமாறு கேட்டுக்கொண்டனர்.

முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக எடியூரப்பாவும் உறுதி அளித்துவிட்டு வந்தார். பாஜக மேலிடத்திடம் இருந்து அதிகாரபூர்வமான தகவல் வந்ததும், முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக எடியூரப்பா ஏற்கனவே அறிவித்தார்.

இந்த நிலையில் எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்று இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

இதையடுத்து பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவுற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எடியூரப்பா கர்நாடக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

மேலும், மதிய உணவிற்கு பிறகு ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.