திடீரென இடிந்து வீழ்ந்த இரண்டு மாடிக் கட்டடம்!! -3 பேர் பலி: 10 காயம்-

ஆசிரியர் - Editor II
திடீரென இடிந்து வீழ்ந்த இரண்டு மாடிக் கட்டடம்!! -3 பேர் பலி: 10 காயம்-

இந்தியாவின் மும்பையில் இரண்டு மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மும்பையின் கோவண்டி பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை குறித்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. 

இந்த அனர்த்தத்தில் காயமடைந்தவர்களில் பலரது நிலைமைகள் கவலைக்கிடமாகவுள்ளதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

மீட்பு படையினரும், தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் புதன்கிழமை இரவு முதல் மும்பை மற்றும் மகாராஷ்டிராவின் கொங்கன் பகுதியில் பெய்த கனமழையால் மத்திய ரயில்வே சேவைகள் தடைசெய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Radio