ஆட்டம் முடிந்துவிட்டதாக நினைக்க வேண்டாம்!! -தாலிபன்களுக்கு அமெரிக்க இராணுவ அதிகாரி எச்சரிக்கை-

ஆசிரியர் - Editor II
ஆட்டம் முடிந்துவிட்டதாக நினைக்க வேண்டாம்!! -தாலிபன்களுக்கு அமெரிக்க இராணுவ அதிகாரி எச்சரிக்கை-

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள தாலிபன் படைகள் பல்வேறு பகுதிகளைக் கைப்பற்றி வரும் நிலையில் அமெரிக்க இராணுவ கூட்டுப் படைகளின் தலைவர் மார்க் மில்லே கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆட்டம் முடிந்துவிட்டதாக தாலிபன்கள் கருத வேண்டாம் என்று அவர் கூறினார். 212 மாவட்டங்களைக் கைப்பற்றி விட்டதாக தாலிபன் பிரச்சாரம் செய்து வருகிறது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய  மார்க் மில்லே, மொத்தம் உள்ள 419 மாவட்டங்களில் பாதியைத் தான் தாலிபன் கைப்பற்றியது என்றும் 34 மாகாணத் தலைநகர்களில் ஒன்று கூட தாலிபன் வசம் இல்லை எனஅறும் அவர் சுட்டிக் காட்டினார்.

பக்ரீத்தை முன்னிட்டு வன்முறைகள் தணிந்திருப்பதாகவும் அமைதிக்கான பேச்சுவார்த்தை தொடங்க வாய்ப்புள்ளதாகவும் அமெரிக்க ராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.


Radio