SuperTopAds

பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 100 பெண்கள்!! -ஒரு மாதத்தின் பின் விடுவிப்பு-

ஆசிரியர் - Editor II
பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 100 பெண்கள்!! -ஒரு மாதத்தின் பின் விடுவிப்பு-

நைஜீரியா நாட்டில் பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட 100 பெண்கள், சிறுவர்களை விடுக்கப்பட்டு விட்டதாக ஜம்பாரா மாகாண அரசு தெரிவித்துள்ளது.

ஆப்பிரிக்கவின் நைஜீரியா நாட்டின் போகோ ஹரம் உள்பட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த பயங்கரவாதிகள் பொது மக்களை கடத்தி அவர்களை பிணைக்கைதிகளாக வைத்து கொண்டு அரசை மிரட்டி தங்களுக்கு தேவையான காரியத்தை சாதித்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அந்த வகையில் அந்நாட்டின் வட மேற்கு பகுதியில் உள்ள ஜம்பாரா மாகாணத்தில் கடந்த மாதம் 8 ஆம் திகதி அங்குள்ள கிராமங்களுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 100 பெண்கள் மற்றும் சிறுவர்கள் பலரை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர்.

இதையடுத்து பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்களை பத்திரமாக மீட்க ஜம்பாரா மாகாண அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வந்தது.

இந்த நிலையில் கடத்தப்பட்ட ஒரு மாதத்துக்கு பின் 100 பெண்கள் மற்றும் சிறுவர்களை பயங்கரவாதிகள் விடுவித்து விட்டதாக ஜம்பாரா மாகாண அரசு தற்போது தெரிவித்துள்ளது.

கடத்தப்பட்டவர்களை விடுவிக்க பயங்கரவாதிகளுக்கு பிணை தொகை எதுவும் வழங்கப்படவில்லை என மாகாண அரசின் மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர். அதே சமயம் எந்த நிபந்தனையின் அடிப்படையில் பயங்கரவாதிகள் அவர்களை விடுவித்தனர் என்பதை கூற அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.