றிசாத் எம்.பியை விடுதலை செய்யுமாறு பிராத்தனை
முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீன் சுகம் பெறவும் விரைவில் விடுதலை பெற்று வீடு திரும்பவும் கோரி இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் நிகழ்வு இன்று(20) மஹ்ரீப் தொழுகையின் பின்னர் இரவு அக்கட்சியின் தேசிய கொள்கை பரப்பு செயலாளரும்இ முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கே.எம். அப்துல் றஸாக் தலைமையில் கல்முனை பட்டின ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்றது.
இந்நிகழ்வானது அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கல்முனை மாநகர உறுப்பினர் எம்.எச்.எம். அப்துல் மனாப்பின் ஏற்பாட்டில் கடந்த பல மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீன் அண்மையில் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் சுகமாகி விடுதலை செய்யப்பட வேண்டும் என கல்முனை பட்டின ஜும்மா பள்ளிவாசல் பேஸ் இமாம் துஆ பிராத்தனை நிகழ்த்தினார்.
மேற்படி துஆ பிராத்தனையின் போது அகில இலங்கை மக்கள் காங்கிரசின் உயர்பீட உறுப்பினர் ஜுனைதின் மான்குட்டி, கல்முனை பிராந்திய முக்கியஸ்தர் கலீல் முஸ்தபா உட்பட கட்சி ஆதரவாளர்கள் பலரும் சுகாதார வழிமுறைகளை பேணி கலந்து கொண்டனர்.