சீனாவில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா!! -புதிதாக 65 பேருக்கு தொற்று உறுதி-

ஆசிரியர் - Editor II
சீனாவில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா!! -புதிதாக 65 பேருக்கு தொற்று உறுதி-

சீனா நாட்டில் கடந்த சில தினங்களாக மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாபவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் நேற்று மட்டும் அந்நாட்டில் புதிதாக 65 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 31 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது. கடந்த ஜனவரி 30 ஆம் திகதி 92 பேருக்கு தொற்று உறுதியாகியிருந்த நிலையில், அதன் பின் தற்போது பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

இந்த புதிய பாதிப்புகளின் மூலம் அந்நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 92,342 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கொரோனாவால் அங்கு இதுவரை 4,636  பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Radio