ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏழுபேரின் விடுதலை குறித்து விரைவில் நடவடிக்கை!! -அறிவித்தார் ஸ்டாலின்-

ஆசிரியர் - Editor II
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏழுபேரின் விடுதலை குறித்து விரைவில் நடவடிக்கை!! -அறிவித்தார் ஸ்டாலின்-

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜுவ் காந்தியின் கொலை விவகாரத்தில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரின் விடுதலை குறித்து வலியுறுத்தியுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசியப்பின் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- 

சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவுக்குத் தலைமை தாங்க குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதேநேரம் ஏழுபேரின் விடுதலை விவகாரத்தில் சட்டப்படியாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கொரோனாவின் மூன்றாவது அலையை தவிர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்த அவர், மேகதாது விவகாரம் குறித்து பிரதமர், மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளேன் என்றார். 


Radio