பாகிஸ்தானில் கோர விபத்து!! -30 பேர் பலி, 74 பேர் காயம்-

ஆசிரியர் - Editor II
பாகிஸ்தானில் கோர விபத்து!! -30 பேர் பலி, 74 பேர் காயம்-

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடந்த வீதி விபத்தில் 30 பேர் பலியானதுடன் மேலும் 74 பேர் காயமடைந்துள்ளதாக மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தலைநகர் லாகூருக்கு கிழக்கேயுள்ள தெரகாசி கான் மாவட்டத்தில் பயணிகள் பேருந்து ஒன்றும், கொள்கலன் பாரஊர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நடந்துள்ளது. 

காயமடைந்தவர்களில் பலர் கவலைக்கிடமாக உள்ளதனால், மரணித்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என வைத்தியர்கள் தரப்பினர் தகல் தெரிவித்துள்ளனர். 

அந்நாட்டில் கடந்த மாதம் தொடருந்து விபத்தொன்றின் போது 56 பேர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன், ஏராளமானவர்கள் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.


Radio