17 நாட்டிகளில் 114 மருத்துவர்கள் கொரோனாவால் மரணம்!!

ஆசிரியர் - Editor II
17 நாட்டிகளில் 114 மருத்துவர்கள் கொரோனாவால் மரணம்!!

இந்தோனேசியா நாட்டில் ஜூலை மாத முற்பகுதியில் அதிகளவான மருத்துவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜூலை மாதத்தின் முதல் 17 நாட்களுக்குள், 114 மருத்துவர்கள் மரணித்ததாக இந்தோனேசிய வைத்தியர்கள் சங்கத்தை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கொரோனா பரவல் ஆரம்பித்த காலம் முதல் இதுவரையில் 545 வைத்தியர்கள் அந்நாட்டில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்டா திரிபு வைரஸ் காரணமாக கொரோனா பரவல் நிலை அதிகரித்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. 


Radio